ஜோசப் ஹென்றி | |
---|---|
பிறப்பு | ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்), ஐ.அ | திசம்பர் 17, 1797
இறப்பு | மே 13, 1878 வாசிங்டன், டி. சி., ஐ.அ | (அகவை 80)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அல்பனி அகாதமி |
அறியப்படுவது | மின்காந்தத் தூண்டல், மின்னியல் வாயில்மணிக்கும் உணாத்திக்கும் முன்னோடியை கண்டுபிடித்தவர் |
சமயம் | பிரெசுபைட்டீரிய திருச்சபை |
வாழ்க்கைத் துணை | ஹாரியத் ஹென்றி (முன்னர் அலெக்சாண்டர்) |
பிள்ளைகள் | வில்லியம் அலெக்சாண்டர் (1832–1862) மேரி அன்னா (1834–1903) ஹெலன் லூயிசா (பி. 1836) கரோலின் (பி. 1839) |
ஜோசஃப் ஹென்றி (Joseph Henry, திசம்பர் 17, 1797 – மே 13, 1878) இசுமித்சோனியன் கழகத்தின் முதல் செயலாளராகவும் இந்நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் ஊக்குவிற்பிற்கான தேசியக் கழகத்தின் நிறுவன உறுப்பினராகவும் பணியாற்றிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார். தமது வாழ்நாளில் மிகவும் மதிக்கப்பட்டவராக விளங்கினார். மின்காந்தங்களை உருவாக்குகையில் மின்காந்தவியல் நிகழ்வான தன்-தூண்டத்தை கண்டறிந்தார். தவிரவும் மைக்கேல் பரடே(1791-1867) கண்டறிந்த பரிமாற்றத் தூண்டலை தானும் தன்னிச்சையாக கண்டறிந்தவர்; இருப்பினும் பரடேதான் தனது ஆய்வை முதலில் வெளியிட்டவர். ஹென்றி மின்காந்தத்தை நடைமுறைக்கேற்ற கருவியாக உருவாக்கினார். மின்சார வாயிற்மணிக்கு (குறிப்பாக மின் கம்பி வழியாக சற்றுத்தொலைவில் இருக்கும் மணியை ஒலிக்கச் செய்தல்,1831) முன்னோடியானதொரு கருவியை உருவாக்கினார். மின்சார உணாத்தியின் முன்னோடியையும் (1835) வடிவமைத்தார். தூண்டத்திற்கான அனைத்துலக அலகான என்றி இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவர் உருவாக்கிய மின்காந்த உணாத்திகளே சாமுவேல் மோர்சும், (1791-1872) சேர் சார்லசு வீட்சுடோனும் (1802-1875) தனித்தனியே கண்டறிந்த நடைமுறை மின்சாரத் தந்திக்கு அடித்தளமாயிற்று.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)