2012இல் செருமனிக்கு ஆடுகையில் முல்லர் | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | தாமசு முல்லர் | ||
பிறந்த நாள் | 13 செப்டம்பர் 1989 | ||
பிறந்த இடம் | வீல்ஹைம், மேற்கு செருமனி | ||
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | முன்னணி/ நடுக்கள தாக்கு வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | பேயர்ன் மியூனிக்கு | ||
எண் | 25 | ||
இளநிலை வாழ்வழி | |||
1993–2000 | டிஎஸ்வீ பால் | ||
2000–2008 | பேயர்ன் மியூனிக்கு இளைஞரணி | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2008–2009 | பேயர்ன் மியூனிக் II | 35 | (16) |
2008– | பேயர்ன் மியூனிக் | 165 | (58) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2004–2005 | செருமனி U16 | 6 | (0) |
2007 | செருமனி U19 | 3 | (0) |
2008 | செருமனி U20 | 1 | (1) |
2009 | செருமனி U21 | 6 | (1) |
2010– | செருமனி | 50 | (20) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 17:17, 10 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 18:00, 16 சூன் 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
தோமா முல்லர் (Thomas Müller, மாற்று ஒலிப்பு:தாமஸ் முல்லர்; பிறப்பு: செப்டம்பர் 13, 1989) செருமனியின் தேசிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் பேயேர்ன் மியூனிக்கு கால்பந்தாட்டக் கழகத்தில் ஒரு முக்கிய அங்கம் ஆவார். முல்லர் நடுக்கள அல்லது முன்னணி வரிசையில் பந்தைத் தாக்கும் நிலையில் விளையாடி வருகிறார். இருபுறத்திலிருந்தும் விளையாடக்கூடிய திறனுடையவர். ஆட்டக்களத்தின் எந்த இடத்திலும் ஆடக்கூடிய திறன், அணியுடன் ஒருங்கிசைவு, நெடுநேரம் ஆடக்கூடிய உடற்றிறன் ஆகியவற்றிற்காக பாராட்டப்படுகிறார். கோல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கோலடிப்பதிலும் நிலைத்த தன்மையைக் காட்டி வருகிறார். பேயர்ன் மியூனிக் கழகத்தில் இளஞர் அணியில் துவங்கிய இவரது விளையாட்டு அங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது. 2009-10 ஆண்டு பருவத்தில் நடந்த அனைத்து கழக ஆட்டங்களிலும் பங்கேற்று அவ்வாண்டில் பேயர்ன் மியூனிக்கு புன்டசுலீகா மற்றும் செருமானிய காற்பந்துக் கழகத்தின் போகல் கோப்பையையும் வென்று இரட்டை எய்த உதவினார். 2010இல் பேயர்ன் மியூனிக்கு வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்திற்கு எய்தவும் காரணமாக இருந்தார். இச்சாதனைகளால் இவர் 2010 உலகக்கோப்பைக்கான தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தப் போட்டியில் ஆறு ஆட்டங்களில் ஐந்து கோல்கள் அடித்து செருமானிய அணி மூன்றாமிடம் எட்ட உறுதுணையாக இருந்தார். ஃபிஃபாவின் சிறந்த இளைய காற்பந்தாட்டக்காரர் என்ற விருதையும் பெற்றார். மேலும் இப்போட்டிகளில் மிகக் கூடுதலான கோல்கள் அடித்தமையால் தங்கக் காலணி விருதையும் வென்றார்.
சூன் 16, 2014இல் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் போர்த்துக்கல்லுடனான செருமனியின் துவக்க ஆட்டத்தில், முல்லர் ஆட்ரிக்கு -ஒரே ஆட்டத்தில் மூன்று கோல்கள் - அடித்து 4-0 என்ற கணக்கில் செருமனி வெல்லக் காரணமானார். தவிரவும் இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் போர்த்துக்கேய வீரர் பேப்பிக்கு இவரை தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)CS1 maint: unrecognized language (link)