சிவெத்லானா சவீத்சுக்கயா

சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா
Svetlana Yevgenyevna Savitskaya
விண்வெளி வீரர்
தேசியம் சோவியத் / ரஷ்யர்
பிறப்பு ஆகத்து 8, 1948 (1948-08-08)
மாஸ்கோ, உருசியா
வேறு தொழில் வானோடி பொறியாளர்
விண்பயண நேரம் 19நாள் 17மணி 06நிமி
தெரிவு 1980
பயணங்கள் சோயுஸ் டி-7, சல்யூட் 7, சோயுஸ் டி-5, சோயுஸ் டி-12

சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா (Svetlana Yevgenyevna Savitskaya, உருசியம்: Светла́на Евге́ньевна Сави́цкая; பிறப்பு: ஆகத்து 8, 1948), என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா முதலாவதாகச் சென்றார்).

சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.

இரண்டு தடவைகள் "சோவியத் வீரர்" என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார்.

சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார். உருசியக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உருசிய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உருப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. "Biographies of USSR / Russian Cosmonauts". Space Facts. 9 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  2. "Space welding anniversary!". Orbiter-Forum. Jelsoft Enterprises Ltd. 16 July 2009. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  3. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names, Volume 1. New York: Springer. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3.
  4. "Role in Russian State Duma". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.

வெளி இணைப்புகள்